தினம் ஒரு திருமுறை
பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்றான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்றிற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்றிற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
- திருஞானசம்பந்தர் (1-16-1)
பொருள்: பாலிருந்து திரண்டு வரும் வெண்ணெய்த் போல்பவரும், பிரமன் போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில், காலனது வலிமை முழுவதையும் அழித்தவராக விளங்கும் ஆலந்துறைக் கோயிலில் உள்ள இறைவனை வழிபடுபவர்களை வினைகள் அடையா.
No comments:
Post a Comment