தினம் ஒரு திருமுறை
திருவளர் சிறப்பின் மிக்க
திருத்தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின்
மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு
பேறளித் திமையோ ரேத்தப்
பொருவிடைப் பாகர் மன்னும்
பொற்பொது அதனுட் புக்கார்.
திருத்தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின்
மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு
பேறளித் திமையோ ரேத்தப்
பொருவிடைப் பாகர் மன்னும்
பொற்பொது அதனுட் புக்கார்.
- சேக்கிழார் (12-4-34)
பொருள்: வீடுபேற்றினை அடைதற்குக் காரணமான சிறப்பு மிக்க இயற்பகை நாயனாருக்கும், தெய்வக் கற்பினையுடைய அவர் மனைவியாருக்கும் அருளில் திளைத்து வாழ்தற்குரிய உயர்ந்த வீடு பேற்றினைக் கொடுத்து, இவ்வருட்டிறத்தினைத் தேவர்களும் எண்ணி ஏத்துமாறு உமையம் மையாரோடு ஆனேற்றில் எழுந்தருளி வந்தவராய சிவபெருமான், நிலை பெற்ற அழகிய தில்லைப் பொதுவிற்கு எழுந்தருளினார்.