தினம் ஒரு திருமுறை
கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறும்
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு விருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப் புலியுரி யரைய னாரை
ஏவணச் சிலையி னாரை யாவரே யெழுது வாரே.
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு விருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப் புலியுரி யரைய னாரை
ஏவணச் சிலையி னாரை யாவரே யெழுது வாரே.
-திருநாவுக்கரசர் (4-77-2)
பொருள்: கோவணத்தை உடுத்தி , பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி , தீப்போன்ற செந்நிற உடம்பில் சாம்பலைப் பூசி , அழகிய வடிவினராய் , செந்தாமரைக் காடு அனைய நிறத்தை உடையவராய் , புலித்தோலை இடையில் அணிந்தவராய் , அம்புக்கு ஏற்ற அழகிய வில்லை உடையவருமான பெருமானின் வடிவழகினை ஓவியத்தில் எழுதவல்ல ஆற்றல் உடையவர் யாவர் ?
No comments:
Post a Comment