தினம் ஒரு திருமுறை
முளைவளரிள மதியுடையவன்
முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை யாளல்லுறு
கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு
குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடுசலஞ் சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே
முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை யாளல்லுறு
கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு
குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடுசலஞ் சலங்கொணர்ந்
தெற்றும்மறைக் காடே
- சுந்தரர் (7-71,7)
பொருள்: வளர்தற்குரிய இளமை யான பிறையை உடையவனும் , யான் முன்னே செய்த வலிய வினை களை , களைகளைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது , செந்நெற் கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற , மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும் , ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற் கரைக்கண் அக்கடல் , வளைந்த சங்குகளோடு , சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக் காடேயாகும் .
No comments:
Post a Comment