தினம் ஒரு திருமுறை
அண்டர் பிரானும் தொண்டர்தமக்
கதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோம்
என்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.
கதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோம்
என்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.
-சண்டேசுவரநாயனார் புராணம் (56)
பொருள்: அண்டர் தலைவராகிய சிவ பெருமானும், சூழ்ந்த ஒளி வடிவில் தோன்றி நிற்கும் விசாரசருமரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவனாக ஆக்கி, `நாம் உண்ட திருவமுதின் மிகுதியும் உடுப்பனவும் சூடுவனவும் ஆன இவை யாவும் உனக்காகும்படி தந்து, அவற்றுடன் சண்டீசன் எனும் பதமும் தந்தோம்` என்று திருவாய் மலர்ந்து தம் இளம்பிறை விளங்கும் சடைமீதிருந்த கொன்றை மாலையை எடுத்து, அவருடைய அழகிய நீண்ட திருமுடிமீது சூட்டியருளினார்.
No comments:
Post a Comment