தினம் ஒரு திருமுறை
ஆர்த்தெழு மிலங்கைக் கோனை யருவரை யடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது படைகொடுத் தருள்வர் போலும்
தீர்த்தமாங் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தவே ழுலகும் வைத்தார் இன்னம்ப ரீச னாரே.
பார்த்தனோ டமர் பொருது படைகொடுத் தருள்வர் போலும்
தீர்த்தமாங் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தவே ழுலகும் வைத்தார் இன்னம்ப ரீச னாரே.
-திருநாவுக்கரசர் (4-72-10)
பொருள்: கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை விரலை ஊன்றி மலையின் கீழ் நசுக்கியவர் . அருச்சுனனோடு போரிட்டு , அவனுக்குத் தெய்வப் படைகளைக் கொடுத்து அருளியவர் . தீர்த்தமான கங்கையைச் சடையில் வைத்தவர் . தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் உள்ளவர்களை வாழ வைத்தவர் இன்னம்பர் ஈசன் ஆவார்.
No comments:
Post a Comment