தினம் ஒரு திருமுறை
பல்லில னாகப் பகலைவென்
றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச் சுனைப்புனமே.
றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச் சுனைப்புனமே.
-திருக்கோவையார் (8-5,1)
பொருள்: பல்லிலனாம்வண்ணம் பகலோனை வென்றவனது தில்லையைப் பாடாதாரைப் போல ஒளியையுடைய னல்லன்; வினாவப்படுகின்றன யானையும் ஏனமுமாயிருந்தன;கையில் நாகத் தழை கையின் நாக மரத்தின்றழை களாயினும்; கண்டவாற்றான் மெய்யா யிருப்பதொரு சொல்லையு முடையனல்லன் கற்ற வா ,பொய்யுரைத்து வறிது போவானுமல்லன் இச்சுனைப் புனத்தைக் கடவான் இவன் யாவன் கொலாம்; இவன்யாவனோ?
No comments:
Post a Comment