தினம் ஒரு திருமுறை
நன்றி புரியும் அவர்தம்பால்
நன்மை மறையின் துறைவிளங்க
என்றும் மறையோர் குலம்பெருக
ஏழு புவனங் களும்உய்ய
மன்றில் நடஞ்செய் பவர்சைவ
வாய்மை வளர மாதவத்தோர்
வென்றி விளங்க வந்துதயம்
செய்தார் விசார சருமனார்.
நன்மை மறையின் துறைவிளங்க
என்றும் மறையோர் குலம்பெருக
ஏழு புவனங் களும்உய்ய
மன்றில் நடஞ்செய் பவர்சைவ
வாய்மை வளர மாதவத்தோர்
வென்றி விளங்க வந்துதயம்
செய்தார் விசார சருமனார்.
-சண்டேசுவரநாயனார் புராணம் (12)
பொருள்: நன்மைகள் பலவற்றுள்ளும் தலையாய நன்மை யான இறையன்பு பூண்டொழுகும் அவர்கள் பால், நன்மையை விளை விக்கும் நான்மறைகளின் துறைகள் பலவும் விளங்கிடவும், அந்தணர் களின் அரிய ஒழுக்கம் இவ்வுலகில் பெருகிடவும், ஏழுலகங்களும் உய்ந்திடவும், பொற் பொதுவில் நடனம் புரிபவரான கூத்தப் பெருமா னையே உறுதிப் பொருளாகக் கொண்டு வணங்கிடும் சைவ மெய்ந் நெறி வளர்ந்தோங்கவும், மாதவத்தினர் புரியும் அரிய செயல்கள் பலவும் வெற்றியுடன் விளங்கிடவும் தோன்றினார் விசாரசருமனார் என்பவர் ஆவர்.
No comments:
Post a Comment