தினம் ஒரு திருமுறை
அரியொடு பூமிசை யானும்
ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி
திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த
எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை
யோஎம் பிரானுக்கே.
ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி
திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த
எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை
யோஎம் பிரானுக்கே.
-சுந்தரர் (7-44-8)
பொருள்: திருமாலும் , பிரமனும் எம்பெருமானுடைய அடியும் முடியும் அறியமாட்டார் ;கீற்றுக்களையுடைய பாம்போடு , வன்னி , ஊமத்தை , பிறை சந்திரன் என்பவைகளை , புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை ஆர் அறிவார் ! அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ !
No comments:
Post a Comment