தினம் ஒரு திருமுறை
கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க் கவுணி
நடையார்பனுவன் மாலையாக ஞானசம் பந்தன்நல்ல
படையார்மழுவன் மேன்மொழிந்த பல்பெயர்ப் பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருல காள்பவரே.
நடையார்பனுவன் மாலையாக ஞானசம் பந்தன்நல்ல
படையார்மழுவன் மேன்மொழிந்த பல்பெயர்ப் பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருல காள்பவரே.
-திருஞானசம்பந்தர் (1-63-12)
பொருள்: கொடிகளோடு கூடிய மாடவீடுகளை உடைய வீதிகள் சூழ்ந்த கழுமலம் என்னும் சீகாழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் சந்தநடைகளோடு கூடிய இலக்கிய மாலையாக மழுப்படையை உடைய சீகாழி இறைவர்மேற்பாடிய பல்பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும் வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள் அமரருலகினை ஆள்வர்.
No comments:
Post a Comment