தினம் ஒரு திருமுறை
ஆன பெருமை வளஞ்சிறந்த
அந்தண் புகலூ ரதுதன்னில்
மான மறையோர் குலமரபின்
வந்தார் முந்தை மறைமுதல்வர்
ஞான வரம்பின் தலைநின்றார்
நாகம் புனைவார் சேவடிக்கீழ்
ஊன மின்றி நிறையன்பால்
உருகு மனத்தார் முருகனார்.
அந்தண் புகலூ ரதுதன்னில்
மான மறையோர் குலமரபின்
வந்தார் முந்தை மறைமுதல்வர்
ஞான வரம்பின் தலைநின்றார்
நாகம் புனைவார் சேவடிக்கீழ்
ஊன மின்றி நிறையன்பால்
உருகு மனத்தார் முருகனார்.
-முருகநாயனார் (5)
பொருள்: வளஞ்சிறந்த புகலூர் எனும் நகரில், பெருமை நிறைந்த மறையவர் குலத்தில் தோன்றியவர், அவர் பழமையான நான்மறைகளின் முதல்வர், ஞானத்தின் முடிவில் நிற்பவர், பாம்பினை அணிந்த சிவபெருமானின் திருவடிக் கீழ் குற்றம் இல்லாத நிறைகின்ற அன்பினால் உருகும் மனத்தினை உடையவர், அவர், முருகனார் எனும் திருப்பெயருடையவர்.
No comments:
Post a Comment