தினம் ஒரு திருமுறை
போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தா னவர்கள் கேளார் குணமிலா வைவர் செய்யும்
பாவமே தூர நின்றார் பழனத்தெம் பரம னாரே.
வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தா னவர்கள் கேளார் குணமிலா வைவர் செய்யும்
பாவமே தூர நின்றார் பழனத்தெம் பரம னாரே.
- திருநாவுக்கரசர் (4-36-2)
பொருள்: போவதர்க்கு வழியாக ஆனவரும் , முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார் . அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்பதில்லை . ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன் . நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீய வினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் உள்ளார்.
No comments:
Post a Comment