தினம் ஒரு திருமுறை
முக்கிமுன் வெகுண் டெடுத்த முடியுடை யரக்கர் கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த வெந்தை
அக்கர வாமை பூண்ட வழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகண் மோதுந் திருமறைக் காட னாரே.
நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த வெந்தை
அக்கர வாமை பூண்ட வழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகண் மோதுந் திருமறைக் காட னாரே.
- திருநாவுக்கரசர் (4-34-2)
பொருள்: அலைகள் கரையை நோக்கி மோதும் திருமறைக்காடனார் , தன் முழுவலியையும் பயன்படுத்தி கோபத்தோடு கயிலையைப் பெயர்த்த , முடியை அணிந்த இராவணனைச் சிரித்தபடியே கால் விரலை ஊன்றி நசுக்கியவராய் , பிறைசூடிய எம் தலைவராய் , எலும்பு , பாம்பு ஆமையோடு இவற்றை அணிந்த அழகராய்த் தம் விருப்பினாலே மறைக்காட்டை இருப்பிடமாகக் கொண்டுள்ளார் .
No comments:
Post a Comment