13 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சரளமந் தார சண்பக வகுள
சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவரை
அருமருந் தருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்தசொன் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந் துடையோர் சிவபத மென்னும்
பொன்னெடுங் குன்றுடை யோரே.
 
                         - கருவூர்த்தேவர் (9-16-11)

 

பொருள்: தேவதாரு, மந்தாரம், சண்பகம், மகிழ், சந்தனம் என்ற மரங்கள் அடர்ந்த நந்தனவனத்தின் இருள் அடர்ந்த உச்சியை உடைய மதில்களால் சூழப்பட்ட இராசராசேச்சரத்து எம்பெருமானை, அரிய காயகற்பத்தை அருந்தி இறத்தலைப் பலகாலம் நீக்கி வைத்த கருவூர்த்தேவர் பாடிய சொல்மாலையாகிய இப்பத்துப்பாடல்களின் சொற்பொருளாகிய அமுதத்தை நுகர்ந்த அடியார்கள் சிவபதம் என்னும் பொன்மயமான நெடிய மலையைத் தம் உடைமையாகப் பெறுவர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...