தினம் ஒரு திருமுறை
போன அதிசூரன்
போரி லவர்க்கழிந்த
மானம்மிக மீதூர
மண்டுபடுவான் கண்படான்
ஆனசெயல் ஓரிரவும்
சிந்தித் தலமருவான்
ஈனமிகு வஞ்சனையால்
வெல்வனென எண்ணினான்.
போரி லவர்க்கழிந்த
மானம்மிக மீதூர
மண்டுபடுவான் கண்படான்
ஆனசெயல் ஓரிரவும்
சிந்தித் தலமருவான்
ஈனமிகு வஞ்சனையால்
வெல்வனென எண்ணினான்.
- ஏனாதி நாயனார் புராணம் (30)
பொருள்: புறமுதுகிட்டு ஓடிய அதிசூரன் போர்க் களத்தில் அவ்வடியவர்க்கு ஆற்றாது, அழிந்த மானம் பெரிதும் மீதூரத் படுத்தவன், உறங்காதவனாய்த் தனக்கு நேர்ந்த செயலை எண்ணி எண்ணி அந்த ஓர் இரவு முழுதும் சிந்தித்துத் துன்புறு கின்றவன், குறைபாடு மிகுந்த வஞ்சனைச் செயலால் அவ்வடியவரை வெல்வேன் என்று எண்ணினான்.
No comments:
Post a Comment