தினம் ஒரு திருமுறை
வந்தழைத்த மாற்றான்
வயப்புலிப்போத் தன்னார்முன்
நந்தமது வாட்பயிற்று
நற்றாயங் கொள்ளுங்கால்
இந்தவெளி மேற்கை
வகுத்திருவேம் பொருபடையும்
சந்தித் தமர்விளைத்தால்
சாயாதார் கொள்வதென.
வயப்புலிப்போத் தன்னார்முன்
நந்தமது வாட்பயிற்று
நற்றாயங் கொள்ளுங்கால்
இந்தவெளி மேற்கை
வகுத்திருவேம் பொருபடையும்
சந்தித் தமர்விளைத்தால்
சாயாதார் கொள்வதென.
- ஏனாதி நாயனார் புராணம் (13)
பொருள்: தன்னிடத்தில் வந்து போருக்கு அழைத்தவ னாகிய அதிசூரன், வலிமை மிகுந்த ஆண் புலி என நிற்கும் ஏனாதி நாதர் முன்நின்று, நாம் இருவரும், வாள் வித்தை பயிற்றுவித்துவரும் தொழில் உரிமையை நிலைநாட்ட, இந்த வெளியிடத்து அணிவகுத்து நிற்கும் நம் இருவரது படைகளும் தம்முள் பொர, இவர்களில் வெற்றி கொள்வார் யாவரோ, அவரே அத்தொழில் உரிமைக்கு உரியவன் என்றான்.
No comments:
Post a Comment