தினம் ஒரு திருமுறை
காரூ ரும்பொழில்சூழ் கண
நாதனெங் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணி
நாவலா ரூரன்சொன்ன
சீருர் செந்தமிழ்கள் செப்பு
வார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறு
வார்பிழைப் பொன்றிலரே.
நாதனெங் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணி
நாவலா ரூரன்சொன்ன
சீருர் செந்தமிழ்கள் செப்பு
வார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறு
வார்பிழைப் பொன்றிலரே.
- சுந்தரர் (7-26-10)
பொருள்: சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானாகிய தெவிட்டாத இனிய அமுதம் போல்வானை , அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய புகழ் மிக்க இச்செந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினையாய் உள்ளன யாவும் நீங்கப்பெற்று , சிவலோகத்தை அடைவார்கள் ; குற்றம் இல்லது ஒழிவர் .
No comments:
Post a Comment