தினம் ஒரு திருமுறை
கருவாய் உலகினுக்
கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல்
மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில்
அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல்
மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில்
அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
- மாணிக்கவாசகர் (8-10-14)
பொருள்: உலகத்துக்குப் பிறப்பிடமாய், அப்பாலாய், இவ்விடத்து எம்பெருமாட்டியோடும் எழுந்தருளி அருவாய் அந்தணனாகி, என்னை அடிமைகொண்ட அழகிய சிவ பெருமானிடத்தே தும்பியே நீ சென்று ஊதுவாயாக.
No comments:
Post a Comment