தினம் ஒரு திருமுறை
அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
- எறிபத்தநாயனார் புராணம் (42)
பொருள்: சிவபெரு மானின் அடியவர்க்கு, இவ்யானை செய்த தீங்கிற்குத் தீர்வு, இங்குப் பாகரோடு யானையையும் துணித்ததனால் அமையாது; இத்தீங்கு நேர்தற்குக் காரணமாகும் என்னையும் கொல்லவேண்டும்; மங்கலம் பொருந்திய மழுவினால் கொல்லுதல் முறைமையன்று; அதற்கு இதுவே தகுதியாகும் என்று, சிவந்த தம்திருக் கரத்தினால் இடையில் செருகியிருந்த வாளை எடுத்து, தம் பிழைக்குத் தீர்வு நேர்வாராய்க் மன்னர் கொடுத்தார்.
No comments:
Post a Comment