தினம் ஒரு திருமுறை
குழையணி காதி னானுக்
கன்பராங் குணத்தின் மிக்கார்
பிழைபடின் அன்றிக் கொல்லார்
பிழைத்ததுண் டென்றுட் கொண்டு
மழைமத யானை சேனை
வரவினை மாற்றி மற்ற
உழைவயப் புரவி மேல்நின்
றிழிந்தனன் உலக மன்னன்.
கன்பராங் குணத்தின் மிக்கார்
பிழைபடின் அன்றிக் கொல்லார்
பிழைத்ததுண் டென்றுட் கொண்டு
மழைமத யானை சேனை
வரவினை மாற்றி மற்ற
உழைவயப் புரவி மேல்நின்
றிழிந்தனன் உலக மன்னன்.
- எரிபத்தநாயனார் புராணம் (37)
பொருள்: குழையை அணிந்த செவியினை யுடைய சிவபெருமானுக்கு அடியவர் ஆகும் குணத்தால் மிக்க இவர், இவ்யானை பிழை செய்து இருந்தாலன்றிக் கொல்ல மாட்டார்; இஃது அவருக்குத் தீங்கு செய்தது உறுதி என்று தம் உள்ளத்தில் கருதிக் கொண்டு, மழை போலும் மதத்தைச் சொரிகின்ற யானையோடு கூடிய சேனைகளின் வரவினைத் தடுத்து, தாம் ஏறி வந்த வலிமை பொருந்திய குதிரையினின்றும் உலகை ஆளும் அரசராய புகழ்ச் சோழர் இறங்கினார்.
No comments:
Post a Comment