தினம் ஒரு திருமுறை
ஆரணத்தேன் பருகிஅருந்
தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தார் ஈரைந்தும்
போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தார் ஈரைந்தும்
போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
- கருவூர்த்தேவர் (9-12-11)
பொருள்: சிறந்த சோலைகளை உடைய கோடைத்திரைலோக்கிய சுந்தரனே! வேதமாகியதேனை உட்கொண்டு, அரியதமிழாகிய மாலைகள் நறுமணம் வீசுமாறு நான் இவ்வாறு, இருக்கின்ற நிலைபெற்ற காரணத்தால், கருவூர்த் தேவனாகிய அடியேன் பாடிய நிலை பெற்ற இத்தமிழ் மாலையிலுள்ள பாடல்கள் பத்தினையும் மனப்பாடம் செய்து காந்தாரப்பண்ணில் பாடுகின்றவர்கள் நிறைவுடையவர்கள் ஆவார்கள்.
No comments:
Post a Comment