தினம் ஒரு திருமுறை
சட்டோ நினைக்க
மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ
கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித்
தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ
கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித்
தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
- மாணிக்கவாசகர் (8-10-7)
பொருள்: மனத்துக்கு அமுதம் போலும் சிவ பெருமானை நினைத்தால் எமக்குச் சேதமுண்டாமோ? உண்டாகாது. ஆதலால், அவனை மறவேன். அவனை நினைத்தற் கிசையாத துட்டரை யாம் காணவும் அருவருப்போம். அந்தப் பெரியோனிடத்தே கோத்தும்பி நீ சென்று ஊதுவாயாக.
No comments:
Post a Comment