தினம் ஒரு திருமுறை
காண்டலேகருத் தாய்நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்க ழலடி
பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயினா லறையோ
ஈண்டுமாடங்க ணீண்டமா ளிகை மேலெழுகொடி வானி ளம்மதி
தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.
பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயினா லறையோ
ஈண்டுமாடங்க ணீண்டமா ளிகை மேலெழுகொடி வானி ளம்மதி
தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.
- (திருநாவுக்கரசர் 4-20-1)
பொருள்: நெருங்கிய நீண்ட மாடங்கள் மாளிகைகள் மற்றும் அதன் மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் வானத்திலுள்ள பிறையைத் தீண்டியவாறு வானத்தில் உலவும் திருவாரூரிலுள்ள பெருமானே ! உன்னைக் காண்பதனையே எண்ணமாகக் கொண்டு உன்னை விருப்புற்று நினைத்தவாறு இருந்த அடியேனுடைய உள்ளத்தில் நீ புகுந்தாயாக , உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளை என் மனத்திற்கு அணிகலனாக அணிந்து கொண்டிருக்கின்ற என்னை விடுத்துப் புறத்தே போக விடேன் .
No comments:
Post a Comment