தினம் ஒரு திருமுறை
நினைக்கும் நிரந்தர னேயென்னும்
நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள்
மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்டுறைத்
தருணேந்து சேகரன் என்னுமே.
நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள்
மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்டுறைத்
தருணேந்து சேகரன் என்னுமே.
- (9-6-3)
பொருள்: நல்லநெற்றியை உடைய பெண்களே! என்மகள் எம்பெருமானை விருப்புற்று நினைப்பவளாய் என்றும் நிலை பெற்றிருப்பவனே என்றும், பிறைச் சந்திரனுடைய அழகினைக் கொண்ட சிவந்த சடையில் மறைந் திருக்கும் கங்கைநீர் ஈரமாக்குகின்ற பெருமானுடைய கொன்றைப்பூங் கண்ணியின்மீது விருப்பம் கொண்டு பேசுவாள். மனத்திற்கு இன்ப வெள்ளத்தை அருளுபவனாய், மலைமகளை மணந்த குணபூரணனாய், வளமான சாத்தனூரில் விருப்புடையவனாய் அவ்வூரிலுள்ள ஆவடு துறை என்ற கோயிலில் உகந்தருளியிருக்கும் பிறைசூடி என்று எம் பெருமானைப் பற்றிப் பேசுவாள்.
No comments:
Post a Comment