தினம் ஒரு திருமுறை
கணவனார் தம்மை நோக்கிக்
கறியமு தான காட்டி
இணையிலா தவரை ஈண்ட
அமுதுசெய் விப்போ மென்ன
உணர்வினால் உணர ஒண்ணா
ஒருவரை உணர்த்த வேண்டி
அணையமுன் சென்று நின்றங்
கவர்துயில் அகற்ற லுற்றார்.
- இளையான்குடிமாற நாயனார் புராணம் (23)
கணவனார் தம்மை நோக்கிக்
கறியமு தான காட்டி
இணையிலா தவரை ஈண்ட
அமுதுசெய் விப்போ மென்ன
உணர்வினால் உணர ஒண்ணா
ஒருவரை உணர்த்த வேண்டி
அணையமுன் சென்று நின்றங்
கவர்துயில் அகற்ற லுற்றார்.
- இளையான்குடிமாற நாயனார் புராணம் (23)
பொருள்: சமைத்து முடித்த அம்மையார், தம் கணவரைப் பார்த்து, அக்கீரை அமுதுகளைக் காட்டி, ஒப்பில்லாத அவ்வடியவரை முறையாகத் திருவமுது செய்விப்போம் என்று கூற, உயிர்கள் தம் அறிவால் உணர ஒண்ணாத சிவபெருமானாகிய அவ் வடியவர் அமுது செய்ய வேண்டி, அவரை அணுகச் சென்று அவர் தம் துயிலை அகற்ற முற்பட்டனர் .
No comments:
Post a Comment