தினம் ஒரு திருமுறை
வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.
-திருக்கோவையார் (8-13,1)
பொருள்: ஒரு கரிய பொழில்; புறமெங்குங் கதிரோன் றான்சென்று நுழையாதவிருளாய்; நடுவண் வளவிய வான் மீன்போலத் தேன்கள் நுழையும் நாகப்பூ மலர்ந்து; திகழும் பளிங்கால்; திங்கட்கடவுள் வானிடத்து வாழ்வையொழிந்து கானிடத்து வாழ்தலைப் பெற்றாற்போலத் தனதெழிலைப் புலப்படுத்தும்.
No comments:
Post a Comment