தினம் ஒரு திருமுறை
விசும்பினுக் கேணி நெறியன்ன
சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே.
சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே.
-திருக்கோவையார் (8-14,2)
பொருள்: விசும்பிற் கிட்டதோ ரேணிநெறி போலுஞ் சிறுநெறிமேல்; மழை யிடையறாது நிற்றலான் இடையிடையுண்டாகிய அசும்பின்கட் சென்று பொருந்தி யேறுமிடத்து இட்டிமையால் அளை நுழைந்தாற் போன்றிருக்கும்; அதுவேயுமன்றி, எம் வாழ்பதி வழுக்கினான் மெய்யே சிந்தைக்குமேறுதற்கரிது; அதனாலாண்டுவரத்தகாது
No comments:
Post a Comment