தினம் ஒரு திருமுறை
மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்பும்
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே.
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே.
-திருநாவுக்கரசர் (4-79-2)
பொருள்: மனைவி , மக்களை பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில் ஈடுபடாது , தவம் என்பதனை உணராது , நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப் பாதுகாப்பதற்கே முயல்கின்றேன் . என்ன செய்வதற்காகப் பிறந்தேன் நான் ?
No comments:
Post a Comment