தினம் ஒரு திருமுறை
அந்தியின் வாயெழி லம்பலத்
தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.
தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.
-மாணிக்கவாசகர் (8-12,1)
பொருள்: அந்தியின்கண் உண்டாகிய செவ்வானெ ழிலையுடைய அம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவனது அழகிய பொன்னையுடைய வெற்பிடத்து; பந்தியாகிய நிரையின்கட் செவ்வித்தேனோடும் பலாச்சுளையை; கடுவன் மந்தியினது வாயில் அருந்தக்கொடுத்துப் பாதுகாக்குஞ் சிலம்பை யுடையாய்; நீயே சென்றுமொழி அவள் மனநெகிழ விரைந்து இவ்வினிய வாய்மொழிகளை அம்மொய்த்த குழலையுடையாட்கு நீயே சென்று சொல்லுவாயாக
No comments:
Post a Comment