தினம் ஒரு திருமுறை
எம்பிரா னென்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை
எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரா னென்னி னல்லா லென்செய்கே னேழை யேனே.
கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை
எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரா னென்னி னல்லா லென்செய்கே னேழை யேனே.
-திருநாவுக்கரசர் (4-76-3)
பொருள்: எம்பெருமான்! என்று அடியேன் அழைத்த உடனே என் உள்ளத்தில் புகுந்து நின்று எம் பெருமான் செயற்படுத்தச் செயற்பட்டு, என்னைச் செயற்படுத்தும் தலைவனை எனக்குள்ளேயே தேடித் திரிகின்ற, அடியேன் தன்னை இன்னான் என்று கண்டு கொண்ட பிறகு எம் பெருமான் என்னைத் தன்னுள்ளே மறையச் செய்வான் என்றால் எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றலேயன்றி அறிவற்ற அடியேன் வேறு யாது செயற்பாலேன்?
No comments:
Post a Comment