தினம் ஒரு திருமுறை
காய்சின வேலன்ன மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே.
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே.
- திருக்கோவையார் (8-10,2)
பொருள்: காய்சினத்தையுடைய வேல்போலும் ஒளியியலுங் கண்ணகிய வலையை; மகளிர் கலந்து வீசினபோது அவ்வலைப்படுதலான் உள்ளமாகிய மீனையிழந்த வர்கள்; பெரிய தென்புலியூர்க்கணுளனாகிய ஈசனுடைய நீற்றையும் எருக்கம்பூவையும் அணிந்து; ஒரு கிழியைக் கையிற்பிடித்து; பாய வல்ல சினத்தையுடைய மாவெனப் பனைமடலைச் சீறூர்க்கணேறுவர், தம்முள்ளம் பெறுதற்கு வேறுபாய மில்லாதவிடத்து.
No comments:
Post a Comment