தினம் ஒரு திருமுறை
தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே
-சுந்தரர் (7-66-2)
பொருள்: எங்கள் முதற்கடவுளே , தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று , தனது வாயினின்றும் உண்டாகும் நூலால் அழகிய பந்தரை உறுதிப்பட ஆக்க , அச் சிலந்தியை , சுருண்ட , சிவந்த சடையை உடையையாகிய நீ சோழ னாய்ப் பிறக்கச்செய்த திருவருளை அறிந்து , அடியேன் , எனது எதிர் வினைக்கு அஞ்சித் துணுக்குற்று , உனது அழகிய மலர்போலும் திரு வடியில் விழுந்து புரண்டு , ` போற்றி ! போற்றி !` என்று துதித்து , அன்பினால் அழுது , உன்னை வந்து அடைந்தேன் ; என்னை ஏற்றுக்கொள் திருவாவடுதுறை பெருமானே
No comments:
Post a Comment