தினம் ஒரு திருமுறை
கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க
நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டுநின் பொற்கழ லடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறு
நிலவு தென்றிரு நின்றியூ ரானே
நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டுநின் பொற்கழ லடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறு
நிலவு தென்றிரு நின்றியூ ரானே
-சுந்தரர் (7-65-7)
பொருள்: பெண் மயில்கள் போலவும் , இளைய பெண் மான்கள் போலவும் , இளைய கிளிகள் போலவும் , பிறை போலும் நெற்றியையுடைய மகளிர் , உயர்ந்த மாடங்களையுடைய மாளிகை தோறும் விளங்குகின்ற , , நான்கு கொம்புகளையுடைய யானை , உன்முன் நின்று , தனது உடல் , அன்பினால் நடுங்கத் துதித்தபொழுதே , முன்னை வடிவத்தையும் , விண்ணுலகத்தை அடையும் பெருமையையும் பெற்ற தன்மையைக் கேட்டு அடியேன் , உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன் என்னை கொண்டருள்
No comments:
Post a Comment