தினம் ஒரு திருமுறை
அங்கண் அமருந் திருமுருகர்
அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த
பூசை அதனாற் புக்கருளிச்
செங்கண் அடலே றுடையவர்தாஞ்
சிறந்த அருளின் பொருளளிக்கத்
தங்கள் பெருமான் அடிநீழற்
தலையாம் நிலைமை சார்வுற்றார்.
அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த
பூசை அதனாற் புக்கருளிச்
செங்கண் அடலே றுடையவர்தாஞ்
சிறந்த அருளின் பொருளளிக்கத்
தங்கள் பெருமான் அடிநீழற்
தலையாம் நிலைமை சார்வுற்றார்.
- முருகநாயனார் (13)
பொருள்: முருக நாயனார் அழகிய சீகாழியில் தோன்றிய திருஞானசம்பந்தரின் சிவம் பெருக்கும் திரு மணத்தில், தாம் முன் செய்த பூசையின் விளைவால் புகுந்தருளி, சிவந்த கண்களை உடைய ஆனேற்றின் மீது அமர்ந்தருளும் பெருமானின் சிறந்த பொருளாகிய திருவருட் பேற்றை வழங்கும் அப் பெருமானின் திருவடிநிழற்கீழ்ச் சென்று பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றார்
No comments:
Post a Comment