தினம் ஒரு திருமுறை
இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாந் தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து.
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாந் தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து.
-மாணிக்கவாசகர் (8-47-10)
பொருள்: என்னை ஆண்டருளினவனாகிய இறைவனது திருவடியைச் நெஞ்சே நீ சிந்தித்துக் கொண்டிருந்து, வேண்டும் பொருள்களை எல்லாம் வேண்டிக் கொள். வேண்டினால் திருப்பெருந் துறையான் நீ வேண்டுவனவற்றை எல்லாம் தந்தருளுவான்.
No comments:
Post a Comment