தினம் ஒரு திருமுறை
நண்ணிய வயல்கள் எல்லாம்
நாடொறும் முன்னங் காண
வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி
ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி
கொண்டிஃ தடியேன் செய்த
புண்ணிய மென்று போத
அமுதுசெய் விப்பா ரானார்.
நாடொறும் முன்னங் காண
வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி
ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி
கொண்டிஃ தடியேன் செய்த
புண்ணிய மென்று போத
அமுதுசெய் விப்பா ரானார்.
-அரிவாட்டாயநாயனார் (11)
பொருள்: நாயனார் நெல் அரியச் செல்லும் வயல்களில் எல்லாம், இவர் முன்னதாகக் காணுமாறு வண்ணமுடன் சிறந்து விளைந்த கதிருடைய செஞ்சாலி நெல்லேயாக ஆக்கிட, அது கண்டு மனம் மகிழ்வுற்ற தாயனார், தாம் கூலியாகப் பெற்ற செஞ்சாலி நெல் அனைத்தையும் கொண்டு, `இது அடியேன் செய்த புண்ணியம்` என்று அதனை முழுமையாகத் திருவமுதாக ஆக்கிப் பெருமானை நாளும் அமுது செய்விப்பாராயினார்.
No comments:
Post a Comment