தினம் ஒரு திருமுறை
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய்
கங்கை யாய்அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய்
கங்கை யாய்அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
-மாணிக்கவாசகர் (8-23-9)
பொருள்: எமனின் உயிரைக் கவர்ந்த தாமரைப் பூப்போன்ற திருவடியையுடையவனே! கங்கையைச் சடையில் தரித்தவனே! நெருப்பை ஏந்திய கையை உடையவனே! கெண்டை மீன் களும், நீல நிறமுடைய பூக்களும் பொருந்திய வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் பொருந்திய பெருமானே! உலகத்தவரும், இந்திரனும் பிரமனும், தேவரும், உன்னருளைப் பெற நிற்கவும், என்னை விரும்பி இனிமையாக ஆட்கொண்டருளினாய். திருமாலும் முறையிட்டுக் கதறுவதற்குரிய அப்பாதமலர்க்கே, மரக்கண் போன்ற கண்ணை உடைய என்னையும் வந்து சேரும்படி அருள் செய்வாயாக.
No comments:
Post a Comment