தினம் ஒரு திருமுறை
துஞ்சி யும்பிறந் துஞ்சி றந்துந்
துயக்க றாத மயக்கிவை
அஞ்சி யூரன் திருப்பு றம்பயத்
தப்ப னைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு
துய்து மென்று நினைத்தன
வஞ்சி யாதுரை செய்ய வல்லவர்
வல்ல வானுல காள்வரே.
துயக்க றாத மயக்கிவை
அஞ்சி யூரன் திருப்பு றம்பயத்
தப்ப னைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு
துய்து மென்று நினைத்தன
வஞ்சி யாதுரை செய்ய வல்லவர்
வல்ல வானுல காள்வரே.
-சுந்தரர் (7-35-10)
பொருள்: இறந்தும் , பின்பு பிறந்தும் , இப்படியே சுழலுதலுக்கு அஞ்சி , நம்பியாரூரன் , ` திருப்புறம்பயத்தை வணங்கி உய்வோம் ` என்று நெஞ்சினாலே நினைத்து , ஆங்கிருக்கின்ற தன் தந்தையைத் தமிழ்ச் சீர்களால் பாடிய இப்பாடல்களைக் கரவில்லாது பாட வல்லவர்கள் , அவைகளை நீக்கவல்ல வானுலகத்தை ஆள்வார்கள் .
No comments:
Post a Comment