தினம் ஒரு திருமுறை
சுந்தரத் தின்பக் குயிலே
சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங்
கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு
மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச்
சேவக னைவரக் கூவாய்.
சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங்
கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு
மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச்
சேவக னைவரக் கூவாய்.
- மாணிக்கவாசகர் (8-18-5)
பொருள்: குயிலே! சூழ்ந்த கிரகணங்களை யுடைய சூரியனைப் போல ஆகாயத்தினின்றும் இறங்கி இம் மண்ணுலகிலுள்ள அடியார்களுடைய பற்றுக்களை ஒழிப்பவனும் உலகத்திற்கு முதலும் இடையும் இறுதியும் ஆகியவனும் பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் அறியமுடியாத செஞ்சாந்து போன்ற சிவந்த திருவடியை உடையவனும் வீரனுமாகிய பெருமானை வரும்படி கூவி அழைப்பாயாக
No comments:
Post a Comment