தினம் ஒரு திருமுறை
கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும்.
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும்.
-மாணிக்கவாசகர் (8-17-10)
பொருள்: கொன்றையும் பிறையும் வில்வத்தோடு ஊமத்தமும் பொருந்திய சடையை உடையவர் என்று நின் மகள் சொல்லுவாள், மேலும், தாயே! சடையில் பொருந்திய ஊமத்த மலர் இப்பொழுது எனக்குப் பெரும்பித்தை உண்டுபண்ணின வாறு என்னே? என்று சொல்லுவாள்.
No comments:
Post a Comment