தினம் ஒரு திருமுறை
மருவிய திருவின் மிக்க
வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின்
அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப்
பிரான்கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த
சிந்தையார் ஒழுக்க மிக்கார்.
வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின்
அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப்
பிரான்கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த
சிந்தையார் ஒழுக்க மிக்கார்.
-குங்குலிகலய நாயனார் (5)
பொருள்: திருவின் சிறப்பினால் மிக்க வளமு டைய அத்திருப்பதியில் வாழ்பவராகிய அரிய மறை வழி நிற்கும் கலயனார் என்னும் பெயருடைய அந்தணர், கங்கையை அணிந்த சிவபெருமான் திருவடிகளைப் பேணி நாள்தொறும் வணங்குபவர்; அன்பு கூர்ந்த சிந்தையர்; ஒழுக்கத்தில் மிக்கவர்.
No comments:
Post a Comment