27 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வந்தவர் குருதி கண்டார்
மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும்
சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமங்
குஞ்சிநின் றலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர்
நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.
 
                 -கண்ணப்பநாயனார் புரணாம்  (165)

 

பொருள்: வந்தவர் இரத்தம் வருதலைக் கண்டார், மயங்கி னார்; வாயில் கொண்ட நல்ல மஞ்சன நீர் சிந்திடவும், கைகளில் இருந்த வில்லும் இறைச்சியும் சிதறி விழவும், கொத்தாக மலர்ந்த பூசனைக் குரிய மலர்கள் கொண்டையினின்றும் விழவும், பசிய தழை களாலாய மாலை சூடிய மார்புடைய திண்ணனார் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்

1 comment:

Dr.V.K.Kanniappan said...

இப்பாடல் ஒரு அருமையான

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

வந்தவர் குருதி கண்டார்
மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும்
சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமங்
குஞ்சிநின் றலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர்
நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்! 165

10 கண்ணப்பநாயனார் புராணம், பன்னிரண்டாம் திருமுறை, சேக்கிழார்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...