தினம் ஒரு திருமுறை
மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே.
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே.
-சுந்தரர் (7-32-5)
பொருள்: மை பொருந்திய கண்களையுடைய இறைவியின் பாகத்தை உடையவனே , கங்கை என்பவளும் உனது திருமேனியில் இருக்கின்றாளேயன்றி அவளுக்கு வேறிடம் இல்லை ; இங்ஙனமாக , கையில் நிறைந்த வளைகளையுடைய காடுகாளோடும் கூடி , பூக்களைக் கொய்தல் பொருந்திய சோலைகளையுடைய கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டது என்னே
No comments:
Post a Comment