தினம் ஒரு திருமுறை
வாளின் படைபயிற்றி
வந்த வளமெல்லாம்
நாளும் பெருவிருப்பால்
நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தடமுடியும்
காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமான்
அடித்தொண்டர்க் காக்குவார்.
வந்த வளமெல்லாம்
நாளும் பெருவிருப்பால்
நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தடமுடியும்
காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமான்
அடித்தொண்டர்க் காக்குவார்.
- ஏனாதி நாயனார் புரணாம் (4)
பொருள்: வாட்படை பயிற்றும் தொழிலில் வந்த பொருள் வருவாய் அனைத்தையும், பெருமை பொருந்திய திருமுடியையும் திருவடியையும் காண இயலாத மால் அயன் ஆகிய இருவரையும் தொண்டாளும் சிவபெருமானின் அடியவர்களுக்கு, நாளும் தம் உள்ளத்து எழும் பேரன்பினால் பொருந்தி, கொடை மிகுதியால் கொடுத்துவரும் கடப்பாடுடையவர்.
No comments:
Post a Comment