தினம் ஒரு திருமுறை
இமையோர் நாயகனே இறை
வாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய் கரு
மாமுகில் போன்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உரு
வேதிருக் காளத்தியுள்
அமைவே யுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.
வாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய் கரு
மாமுகில் போன்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உரு
வேதிருக் காளத்தியுள்
அமைவே யுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.
- சுந்தரர் (7-26-2)
பொருள்: தேவர்களுக்கு நாயகனே , கடவுளே , என் துன்பங்களை விலக்குதற்குத் துணையாய் நின்று உதவுபவனே , பொறுமை நிறைந்த அருளையுடையவனே , கரிய பெரிய மேகம் போலும் கண்டத்தை யுடையவனே உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய அவ்வடிவத்தை உடையவனே , திருக்காளத்தியுள் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே கிடையாது