தினம் ஒரு திருமுறை
மன்னிய சிறப்பின் மிக்க
வளநக ரதனின் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து
சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க
தொண்டர்தஞ் சிந்தை நீங்கா
அந்நிலை யரனார் வாழ்வ
தானிலை யென்னுங் கோயில்.
வளநக ரதனின் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து
சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க
தொண்டர்தஞ் சிந்தை நீங்கா
அந்நிலை யரனார் வாழ்வ
தானிலை யென்னுங் கோயில்.
- எறிபத்த நாயனார் புராணம் (5)
பொருள்: நிலைபெற்ற சிறப்பினால் உயர்ந்த வளத்தினை உடைத்தாகிய அந்நகரத்தின்கண் இருக்கும் பொன்னாலாகிய மதிலைச் சுற்றி அமரர்களும் வழிபடுதற்குரிய சிறப்பினால், தம் உள்ளத்துக் கலந்த அன்பிற்சிறந்த அடியவர்களின் இதயத்தை விட்டு என்றும் நீங்காத அந்நிலைமையினையுடைய சிவபெருமானார் இருப் பது ஆனிலை என்னும் திருக்கோயி லாகும்
No comments:
Post a Comment