தினம் ஒரு திருமுறை
தடக்கையா லெடுத்து வைத்துத் தடவரை குலுங்க வார்த்துக்
கிடக்கையா லிடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான் முருகமர் கோதை பாகத்
தடக்கினா ரென்னையாளு மதிகைவீ ரட்ட னாரே.
கிடக்கையா லிடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான் முருகமர் கோதை பாகத்
தடக்கினா ரென்னையாளு மதிகைவீ ரட்ட னாரே.
- திருநாவுக்கரசர் (4-25-10)
பொருள்: கயிலை மலை நடுங்குமாறு ஆரவாரித்து நீண்ட கைகளால் பெயர்க்க முயன்ற இராவணன் அதன் கீழகப்பட்டுத் துன்பங்கள் மிகுந்து விளக்கமானமண மணிமுடிகள் நசுங்கி அவலமுறுமாறு தம் திருவடிப் பெருவிரலைச் சற்றே வளைத்து ஊன்றினார் . அவரே நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை இடப்பாகமாக அடக்கியவரும் என்னை அடியவனாக்கிக் கொண்ட அதிகை வீரட்டனார் ஆவர்
No comments:
Post a Comment