தினம் ஒரு திருமுறை
புரமன் றயரப் பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே.
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே.
-திருக்கோவையார் (8-23,6)
பொருள்: புரம்வருந்த அன்று பொருப்பாகிய வில்லை யேந்தி; அயனையன்று சிரமரிந்த வனது பெரியபனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு; தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று; மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி; அன்றி உயிர்கவர வெகுண்டு; வான் சரத்தைத் தருமாயின்; ஒக்கும்
No comments:
Post a Comment