தினம் ஒரு திருமுறை
வாரிக் களிற்றின் மருப்புகு
முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே.
முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே.
-திருக்கோவையார் (8-17,16)
பொருள்: களிற்றின் மருப்புக்களினின்று முக்க முத்துக்களை; வேரிக்கு விலையாக முகந்துகொடுக்குஞ் சிறந்த மலைக்கணுண்டாகிய நாட்டையுடையாய்; விரியுந் திரையையுடைய யாறாகிய பெண்ணிற்குக் கொடுத்தற்குப் பொருந்திய; பெரிய சடைமுடியையுடைய நம்பரது தில்லை யினுளளாகிய ஏரை யுடைய இக்களிக் கரு மஞ்ஞையை யொப்பாள்; இத்தன்மையை யெய்துவதென்? நீயுரை
No comments:
Post a Comment