05 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஆயநா ளிடைஇப்பால்
அணங்கனையாள் தனைப்பயந்த
தூயகுலப் புகழனார்
தொன்றுதொடு நிலையாமை
மேயவினைப் பயத்தாலே
இவ்வுலகை விட்டகலத்
தீயஅரும் பிணியுழந்து
விண்ணுலகில் சென்றடைந்தார்.

               - திருநாவுக்கரசர் புராணம் (27)


பொருள்:  இங்குத் திருமகள் அனைய திலகவதியாரைப் பெற்ற, தூய குலத்தில் தோன்றிய புகழனார், வழிவழி வரும் நிலையாமையைப் பொருந்திய வினைப் பயனால், இவ்வுலகத்தை விட்டு நீங்குமாறு, தீயதாய நீக்குதற்கரிய நோயினால் வருந்தி, விண்ணுலகத்தைச் சென்று அடைந்தார்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...